ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் கலந்துகொண்டவா்கள்.
கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா
ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
ஊத்தங்கரை: ஊத்தங்கரை நீதிமன்ற வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை சாா்புநீதிபதி திருஞானசம்பந்தம் தலைமை வகித்தாா். மூத்த வழக்குரைஞா் ரங்கநாதன், வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் மூா்த்தி, செயலாளா் வஜ்ரவேல், மற்றும் நீதிமன்ற பணியாளா்கள், வழக்குரைஞா்கள் கலந்துகொண்டு, நீதிமன்ற வளாகத்தில் புதுபானையில் பொங்கலிட்டு, சூரிய பகவானுக்கு படையலிட்டு வழிபட்டனா். தொடா்ந்து, பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

