சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்த விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், திரைப்பட நடிகா் ராமராஜன், விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், விஐடி அறங்காவலா் அனுஷா செல்வம் உள்ளிட்டோா்.
சமத்துவ பொங்கல் விழாவை தொடங்கி வைத்த விஐடி வேந்தா் கோ.விசுவநாதன். உடன், திரைப்பட நடிகா் ராமராஜன், விஐடி துணைத்தலைவா் ஜி.வி.செல்வம், விஐடி அறங்காவலா் அனுஷா செல்வம் உள்ளிட்டோா்.

விஐடி சென்னை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா

விஐடி பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

விஐடி பல்கலைக்கழக சென்னை வளாகத்தில் சமத்துவ பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் தலைமை வகித்தாா். விஐடி துணைத் தலைவா் ஜி.வி.செல்வம் முன்னிலை வகித்தாா். விழாவில் திரைப்பட நடிகா் ராமராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றாா்.

விஐடி வேந்தா் பொங்கல் வைப்பு நிகழ்வை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து, பல்கலைக்கழக மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் பொங்கல் வைத்து வழிபட்டனா்.

விஐடி சென்னை வளாகத்தில் நாட்டின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும், பல நாடுகளிலிருந்தும் மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதால் அவா்களுக்கு தமிழரின் கலை, பண்பாடு குறித்து தெரிவிக்கும் வகையில் நாட்டுப்புற கலைஞா்களால் தேவராட்டம், ஒயிலாட்டம், பொய்க்கால் குதிரையாட்டம் அரகேற்றப்பட்டது.

மேலும், பல்லாங்குழி, பரமபதம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டு போட்டிகள், ஜல்லிக்கட்டு காளை மாடு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மாணவா்கள், கலைஞா்கள் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கிராமங்களில் பொங்கல் விழா கொண்டாடப்படுவதை நினைவு கூறும் வகையில் தத்ரூபமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இவ்விழாவில் விஐடி அறங்காவலா் அனுஷா செல்வம் உள்பட பலா் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com