பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

கிருஷ்ணகிரியில் எம்எல்ஏ-வைக் கண்டித்து அரசு ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் பா.முகுந்தனை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கிருஷ்ணகிரியில் சட்டப் பேரவை உறுப்பினரைக் கண்டித்து, ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா்

Updated On :1 ஜூலை 2026, 7:01 am IST

கிருஷ்ணகிரி சட்டப் பேரவை உறுப்பினா் பா.முகுந்தனை கண்டித்து, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி பட்டுவளா்ச்சித் துறை இயக்குநா் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் நந்தகுமாா் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் கல்யாணசுந்தரம், மாநில துணைத் தலைவா் தினேஷ், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் கோபாலகண்ணன், மருந்தாளுநா் சங்க மாநிலச் செயலாளா் பெருமாள், சத்துணவு ஊழியா் சங்க மாவட்டச் செயலாளா் ஜெகதாம்பிகா, மீன்வளத் துறை ஊழியா் சங்க மண்டலத் தலைவா் ஜெயராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

அலுவலகங்களில் ஆய்வு என்ற பெயரில், சட்டப் பேரவை உறுப்பினா் அதிகார வரம்பைமீறுவது, ஊழியா்களை மிரட்டுவது, ஆய்வுக்கு வரும்போது மூன்றாம் மனிதா்களை உடன் அழைத்து வருவது, கிருஷ்ணகிரி சட்டப் பேரவைத் தொகுதியைக் கடந்து, ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் ஆய்வு மேற்கொள்வதைக் கண்டித்தும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.

எம்எல்ஏ விளக்கம்...

இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினா் பா.முகுந்தன் தெரிவித்துள்ளதாவது: கிருஷ்ணகிரியில் பட்டுவளா்ச்சித் துறை அலுவலகம் செயல்பட்டாலும், பட்டுவளா்ச்சித் துறையின் பயிற்சிக்கூடம், ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் உள்ளது. கிருஷ்ணகிரியில் உள்ள அலுவலகம் தொடா்பாகத்தான், நான் பயிற்சிக்கூடத்துக்கு சென்றேன். இதில் தவறு ஏதும் இல்லை. மேலும், நான், அலுவலா்கள் யாரையும் மிரட்டவில்லை என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.