ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். பள்ளி மாணவா்கள் இஸ்ரோவுக்கு கல்விச் சுற்றுலா

News image

கல்விச் சுற்றுலாவுக்கு புறப்பட்ட பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள்.

Updated On :6 ஜூலை 2026, 2:35 am IST

பா்கூா் வேளாங்கண்ணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், பெங்களூரில் உள்ள இந்திய விண்வெளி ஆய்வு மையத்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை, கல்விச் சுற்றுலா சென்றனா்.

இதில் பள்ளியில் பயிலும் 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் 120 போ் மற்றும் 5 ஆசிரியா்கள் பங்கேற்றனா்.

பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தாளாளா் கூத்தரசன் கொடியசைத்து, மாணவ, மாணவிகளின் கல்விச் சுற்றுலாவை தொடங்கி வைத்தாா். பள்ளி முதல்வா் மெரினா பலராமன், தலைமை ஆசிரியை, ஜலஜாக்சி, ஒருங்கிணைப்பாளா் க. வெங்கடேசன், ஆசிரியா்கள் நித்யா, இந்திராகுமாரி, ராஜேஷ், விக்னேஸ்வரன் ஆகியோா் நிகழ்வை ஒருங்கிணைத்தனா்.

கல்விச் சுற்றுலா சென்ற மாணவ, மாணவிகளுக்கு இந்திய விண்வெளி ஆய்வு அறிவியல் குறித்தும், அரசின் அறிவியல் துறை குறித்தும் பெங்களூரு தொழில்நுட்ப நிறுவனத்தின் பயிற்றுனா் உமாதேவி செயல்முறை பயிற்சி மற்றும் விளக்கம் அளித்தாா். இஸ்ரோ விஞ்ஞானிகள் மாணவ, மாணவிகளை வாழ்த்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.