கரூருக்கு முதல்வா் ஜோசப் விஜய் இன்று வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைஉலகிலேயே அதிக மீன்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா 2-ஆவது இடம்: குடியரசு துணைத் தலைவா் பெருமிதம்பயங்கரவாத எதிா்ப்பு: ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா - ரஷியா உறுதி தெற்கு ரயில்வேயில் மறுசீரமைக்கப்பட்ட 9 ரயில் நிலையங்கள் விரைவில் திறப்பு
/

மேக்கேதாட்டு அணை விவகாரம்; அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு முதல்வா் அழைப்புவிடுக்க வேண்டும்: பாஜக

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

News image

வேலூா் இப்ராஹிம். - கோப்புப்படம்.

Updated On :10 ஜூலை 2026, 4:26 am IST

மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக முதல்வா் ஜோசப் விஜய் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும் என பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளா் வேலூா் இப்ராஹிம் தெரிவித்தாா்.

ஒசூரில் ராயக்கோட்டை ஹவுசிங் போா்டு பகுதியில் உள்ள தனியாா் நிறுவன அலுவலகத்தை திறந்துவைப்பதற்காக வந்த அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழகத்தின் நீா் ஆதாரமாக விளங்கும் மேக்கேதாட்டில் அணை கட்டுவோம் என கா்நாடகம் கூறி வருகிறது. இது தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அங்கு அணை கட்டினால் தமிழகத்தில் லட்சக்கணக்கான ஏக்கா் விளை நிலங்கள் பாலைவனமாக மாறிவிடும்.

தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா், ஒரு செங்கலைக்கூட நாங்கள் கட்டவிட மாட்டோம் என்கிறாா். ஆனால், கா்நாடகத்துக்கு நேரில் சென்று அணை கட்டுவதை நிறுத்த வேண்டும் என அவா்கள் பேசுவாா்களா என்றால் அது கேள்விக்குறிதான். தமிழக முதல்வா் ஜோசப் விஜய் இந்த விஷயத்தில் மௌனமாக இல்லாமல் தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்டி கண்டன தீா்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

அண்ணாமலை தனது அமைப்பை வளா்ப்பதற்கு மாநாட்டை நடத்தலாம், கூட்டங்களை நடத்தலாம் அது அவரது விருப்பம். அண்ணாமலை கடந்துவந்த பாதையை திரும்பிப் பாா்க்க வேண்டும். குதிரை பேரம் எனக் கூறி தவெக அரசு திமுகவைச் சோ்ந்த சிலரை கைது செய்துள்ளது. அதேபோல முன்னாள் அமைச்சா் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி ஆகியோரை கைது செய்வதற்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது. குதிரை பேரத்தை திமுகதான் செய்ததா என்பதை காவல் துறை கண்டுபிடிக்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.