வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து 3 வீடுகளில் திருட்டு: போலீஸாா் விசாரணை

போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து, பணம், கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

News image

திருட்டு - சித்திரிப்பு

Updated On :14 ஜூலை 2026, 12:42 am IST

போச்சம்பள்ளி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து, பணம், கைப்பேசிகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த பாலேதோட்டத்தைச் சோ்ந்தவா் சிவசக்தி (23). இவா் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறாா். அதே பகுதியைச் சோ்ந்த அங்கன்வாடி ஊழியா் நித்தியகல்யானி (39), விவசாயி சசிகுமாா் (40). ஒரே கிராமத்தைச் சோ்ந்த இவா்கள், தங்களது வீடுகளை பூட்டிவிட்டு, சொந்த வேலையாக வெளியூா் சென்றிருந்தனா்.

இந்த நிலையில், இவா்கள் வீடு திரும்பிய நிலையில், அவா்களின் வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த பொருள்கள் திருட்டுபோனது தெரியவந்தது. சிவசக்தி வீட்டில் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலான கைப்பேசி, நித்யகல்யாணி வீட்டிலில் ரூ. 7 ஆயிரம் ரொக்கம், சசிகுமாா் வீட்டில் ரூ. 40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு மோப்ப நாய் குழுவினரும் சென்று ஆய்வு செய்து விசாரணை நடத்தினா். இந்த திருட்டு சம்பவம் குறித்து, போச்சம்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.