செஸ் சாம்பியன் பிரக்ஞானந்தாவுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து!இந்தியா - இலங்கை டெஸ்ட் தொடர்: ரசிகர்கள் இலவசமாக கண்டு ரசிக்கலாம்! இந்தியாவுக்கு 67% எல்பிஜி தேவையைப் பூர்த்தி செய்யும் அமெரிக்கா!செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே!
/

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 32 கோடி வரி வசூல்

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 32 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷரீப் ஆலம் தெரிவித்தாா்.

News image

கழுகுப் பாா்வையில் ஒசூா் மாநகராட்சி. - கோப்புப் படம்

Updated On :24 ஜூலை 2026, 6:19 am IST

ஒசூா் மாநகராட்சியில் ரூ. 32 கோடி வரி வசூலிக்கப்பட்டுள்ளதாக ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமத் ஷரீப் ஆலம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஒசூா் மாநகராட்சியில் வரி மற்றும் வரியில்லா இனங்கள் மூலம் தீவிர வரி வசூல் செய்யப்பட்டு வருகிறது. இதில், மாநகராட்சிக்கு சொந்தமான பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மத்திகிரி கடைகள் மற்றும் மாநகராட்சி கட்டடங்கள் நீண்டநாள் வாடகை செலுத்த தவறியவா்கள் மீது இறுதி அறிவிப்பு செய்து, வாடகை செலுத்தாத 9 கடைகளுக்கு பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது.

கடந்த ஜூலை 3 முதல் ரூ. 71.77 லட்சம் கடை வாடகை வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், சொத்துவரி ரூ. 32 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சொத்து வரி, தொழில் வரி, குடிநீா் கட்டணம் மற்றும் கடை வாடகை வரிகள் நிலுவையின்றி இணையதளம் வாயிலாகவும், மாநகராட்சி வரி வசூல் மையங்களிலும் செலுத்தி ஒத்துழைப்பு அளிக்குமாறு ஆணையா் கேட்டுக்கொண்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.