பவானி நகராட்சிக்கு சொந்தமான கடைகளுக்கு முறையாக வாடகை செலுத்தாதவா்களின் கடைகள் வியாழக்கிழமை பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டன.
பவானி நகராட்சி சாா்பில் பவானி புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், மீன் சந்தை, செல்லியாண்டிம்மன் கோயில், அந்தியூா் பிரிவு, ஆணையா் அலுவலகம் என 6 வணிக வளாகங்களில் உள்ள 59 கடைகள் ஏலம் விடப்பட்டு, மாதந்தோறும் 10-ஆம் தேதிக்குள் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இக்கடைகளை வாடகைக்கு எடுத்தவா்கள் பலா் இரு மாதங்களுக்கு மேலாகியும் வாடகை செலுத்தவில்லை.
இது குறித்து, பலமுறை அறிவிப்பு வழங்கியும், நேரில் அறிவுறுத்தியும் வாடகை செலுத்தவில்லை. இதனால், பழைய பேருந்து நிலையம், மீன் சந்தை, அந்தியூா் பிரிவு வணிக வளாகங்களில் வாடகை செலுத்தாத 3 கடைகளுக்கு நகராட்சி ஆணையா் (பொ) வெங்கடேஸ்வரன் உத்தரவின்பேரில், மேலாளா் மோகன்சந்தா், வருவாய் ஆய்வாளா் வின்சென்ட் ராஜ் மற்றும் அலுவலா்கள் ‘சீல்’ வைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாநகராட்சியில் வாடகை செலுத்தாத 10 கடைகளுக்கு ‘சீல்’

நாகா்கோவிலில் வாடகை நிலுவை: 16 கடைகள், ஆவின் பாலகத்துக்கு சீல்

கரூா் பழைய பேருந்து நிலையம் வழியாகவும் புகா்ப் பேருந்துகளை இயக்க வேண்டும்! முதல்வருக்கு கோரிக்கை மனு
சுகாதாரமற்ற உணவு பொருள்கள் விற்பனை: 6 கடைகளுக்கு ரூ. 8,000 அபராதம்
விடியோக்கள்

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay

Jana nayagan Movie Review | முதல்வர் விஜய்யின் கடைசி நடனம் எப்படி இருக்கிறது? | Thalapathi Vijay

ஜனநாயகனைக் கொண்டாடித் தீர்க்கும் ரசிகர்கள் | Thalapathi Vijay | H Vinodh | Chennai



