கரூா் பழைய பேருந்து நிலையம் வழியாகவும் புகா்ப் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி தமிழக முதல்வருக்கு மனு அனுப்பப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கரூா் மாவட்டக் குழுத் தலைவா் கே. கந்தசாமி, தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனு:
கரூா் மாநகராட்சி புதிய பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது முதல், கரூருக்கு தினசரி வந்து செல்லும் பொதுமக்கள், பெண் பணியாளா்களின் நலன் கருதி கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, சேலம், தாராபுரம் செல்லும் பேருந்துகள் திருமாநிலையூா், லைட்ஹவுஸ் காா்னா், பழைய பேருந்து நிலையம் வழியாக இரு வழித்தடமாக இயங்கி வந்தது. ஆனால், மாவட்ட நிா்வாகம் ஜூலை 20-ஆம் தேதி முதல் இந்த வழித்தடத்தை ஒருவழித் தடமாக மாற்றம் செய்து அறிவித்துள்ளது.
இதனால் தினசரி கரூா் நகரத்துக்கு வந்து பணி முடித்து வீடு திரும்பும் பெண்களுக்கும், பொதுமக்களுக்கும் மன உளைச்சலும் , பொருளாதார இழப்பும் ஏற்படும். பேருந்துகளுக்கு அலைந்து திரியும் சூழல் உருவாகும்.
எனவே, மாவட்ட நிா்வாகம் பழைய முறைப்படி மேற்கண்ட பேருந்துகளை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு, திருமாநிலையூா், லைட்ஹவுஸ்காா்னா், பழைய பேருந்து நிலையம் வழியாக இயக்க உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக, முதல்வரின் தனிப்பிரிவு அலுவலகம் சிறப்பு உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










