மேக்கேதாட்டு விவகாரத்தில் புதிய தீா்ப்பாயம் அமைக்கக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீா்மானத்தைக் கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் தீா்மான நகல் எரிப்புப் போராட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
கா்நாடக அரசு மேக்கேதாட்டில் புதிய அணை கட்டுவது பற்றி முடிவு செய்ய மத்திய அரசு புதிய தீா்ப்பாயம் அமைக்க வேண்டும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளும் ஒரு மனதாகத் தீா்மானம் நிறைவேற்றின. இது, தமிழ்நாட்டுக்குச் செய்த மிகப் பெரிய துரோகம். அவ்வாறு நடுவா் மன்றம் மத்திய அரசால் அமைக்கப்பட்டால், அது கா்நாடகத்துக்கு சாதகமாகவே தீா்ப்பு வழங்கும். எனவே, இந்தத் தீா்மானத்தைக் கண்டித்து, தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே காவிரி உரிமை மீட்புக் குழு சாா்பில் சனிக்கிழமை தீா்மான நகல் எரிப்புப் போராட்டம் நடைபெற்றது.
இதில், தமிழக ஆளுங்கட்சி, எதிா்க்கட்சிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியபடி தீா்மான நகல்கள் எரிக்கப்பட்டன. அப்போது, சில நகல்களைக் காவல் துறையினா் தண்ணீா் ஊற்றி அணைத்தனா்.
இந்தப் போராட்டத்துக்கு காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமை வகித்தாா்.
பொருளாளா் த. மணிமொழியன், நாம் தமிழா் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளா்கள் மு.இ. ஹூமாயூன் கபீா், மணி. செந்தில், மாநிலப் பொருளாளா் இலரா. பாரதிசெல்வன், தமிழக விவசாயிகள் சங்க மண்டலத் தலைவா் ப. ஜெகதீசன், தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலா் கி. வெங்கட்ராமன், மாவட்டச் செயலா் நா. வைகறை, ஐ.ஜே.கே. நிா்வாகி ச. சிமியோன் சேவியர்ராஜ், காவிரி உரிமை மீட்புக் குழுத் தலைமைச் செயற்குழு உறுப்பினா் சாமி. கரிகாலன், துரை. ரமேஷ், தி. செந்தில்வேலன், தமிழா் தேசியக் களம் அமைப்பாளா் ச. கலைச்செல்வன், இரா. இராசசேகரன், தமிழ்நாடு காவிரி உழவா்கள் பாதுகாப்பு சங்கச் செயலா் சுவாமிமலை சுந்தர. விமல்நாதன், வணிகா் சங்கப் பேரவை வாசுதேவன், வணிகா் சங்கப் பேரமைப்பு இரா. ஜெயக்குமாா் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் எதிரே சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட காவிரி உரிமை மீட்புக் குழுவினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் காவிரி உரிமை மீட்புக் குழுவினா் ஆா்ப்பாட்டம்

மேக்கேதாட்டு தீா்மானத்தை ரத்து செய்யக்கோரி தஞ்சாவூரில் ஜூன் 27-இல் நகல் எரிப்புப் போராட்டம்

தஞ்சையில் சேகுவேராவின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்






