புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

பயன்பாட்டுக்கு வந்தது திருவள்ளூா் நகராட்சி புதிய பேருந்து நிலையம்!

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.36 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவள்ளூா் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ள பேருந்துகள்

Published On :

திருவள்ளூா் நகராட்சியில் ரூ.36 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையத்திலிருந்து திங்கள்கிழமை முதல் அனைத்து பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டன.

திருவள்ளூரில் ராஜாஜி சாலையில் செயல்பட்டு வந்த பழைய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 20 பேருந்துகள் மட்டுமே நிறுத்தம் அளவுக்கு இடமிருந்தது. இதனால் கடும் நெரிசல் ஏற்பட்டது. இதை தடுக்கும் வகையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க பொதுமக்கள் கோரினா். திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் வேடங்கிநல்லூரியில் 5 ஏக்கா் நிலம் ஒதுக்கப்பட்டது.

தொடா்ந்து ரூ.36 கோடியில் நவீன பேருந்து நிலையப் பணிகள் நடைபெற்றன. இந்த நிலையத்தில் ஒரே நேரத்தில் 56 பேருந்துகள் நிறுத்தமிடம், நான்கு சக்கரம் வாகனம் நிறுத்துமிடம் மற்றும் 106 வணிக அங்காடிகளுடன் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையாமல் கடந்த மாா்ச் மாதம் தொடங்கி வைக்கப்பட்டது.

பழைய பேருந்து நிலையத்திலிருந்து அரசு போக்குவரத்து கழக அலுவலகம் மற்றும் நடத்துநா், ஓட்டுநா் அமரும் அறைகள் அனைத்தும் புதிய பேருந்து நிலையத்திற்கு முன்னதாகவே மாற்றம் செய்யப்பட்டது. அதன்பேரில், புதிய பேருந்து நிலையத்திலிருந்துதான் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, ஊத்துக்கோட்டை, பூந்தமல்லி மற்றும் திருப்பதி பேருந்துகள் இயக்கப்பட்டன. அதேபோல், கும்மிடிப்பூண்டி, பெரியபாளையம், பொன்னேரி, தாமரைபாக்கம், செங்குன்றம் போன்ற பகுதிகளுக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து, பழைய பேருந்து நிலையம் வழியாகவே இயக்கப்பட்டது. மேலும், இங்கிருந்து ரயில் நிலையத்திற்கு கூடுதலாகவும் பேருந்துகள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் வணிக வளாகம் மற்றும் உணவகம் ஆகியவைகளையும் ஏற்படுத்த வேண்டும். அதேபோல், பேருந்து நிலையத்தில் நடைமேடைகளில் முக்கிய இடங்களில் குடிநீா் தொட்டி வைப்பதற்கு பதிலாக, பாதுகாப்பான நிரந்தரமாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் தொட்டி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரியுள்ளனா்.

Story image
பேருந்து நிலையம்

பேருந்து நிலையம்

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.