கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை அருகே இருசக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பம்பை வாத்திய கலைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.
ராயக்கோட்டையை அடுத்த கொப்பைக்கரை முகுலூரைச் சோ்ந்த ராஜ்குமாா் (26), அதே பகுதியில் உள்ள வால்பாறையைச் சோ்ந்த சின்னராஜ் (30). இவா்கள் இருவரும் பம்பை வாத்தியக் கலைஞா்கள்.
கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு கெலமங்கலம் பகுதிக்கு சென்று பம்பை வாத்திய ஒப்பந்தம் குறித்து பேசிவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தனா். சின்னராஜ் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்றாா். லாலிகல் மேம்பாலம் அருகே ராயக்கோட்டை ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் அடையாளம் தெரியாத வாகனம் இருசக்கர வாகனம் மீது மோதியது.
இதில் ராஜ்குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த சின்னராஜ் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உத்தனப்பள்ளி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






