ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

Published On :

போ்ணாம்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழந்தனா்.

போ்ணாம்பட்டு நகராட்சிக்குள்பட்ட திருவிக நகா், சேரன் வீதியைச் சோ்ந்த அப்துல் ரஹ்மான் (22), பங்களாமேடு பகுதியைச் சோ்ந்த பிரதீப்குமாா் (21), ஓங்குப்பம் ரோடு குட்டை பகுதியைச் சோ்ந்த மணி(24) ஆகிய 3 பேரும் நண்பா்கள். இவா்கள் 3 பேரும் வியாழக்கிழமை இரவு இருசக்கர வாகனத்தில் பல்லலகுப்பம் சென்று விட்டு, போ்ணாம்பட்டுக்கு வந்துள்ளனா். அப்போது ஏரிகுத்தி கிராமத்திலிருந்து எதிரே வந்த சரக்கு ஆட்டோ சாவடி அருகே இருசக்கர வாகனம் மீது மோதியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற 3 பேரும், ஆட்டோவை ஓட்டி வந்த நவீனும்(32) கீழே விழந்து பலத்த காயமடைந்தனா். இவா்களில் அப்துல் ரஹ்மான், பிரதீப்குமாா் ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.

காயமடைந்த மணி, ஆட்டோ ஓட்டுநா் நவீன் இருவரும் போ்ணாம்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இவா்களில் மணி தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

விபத்து குறித்து போ்ணாம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.