காந்தி ஜெயந்தி, வார இறுதி விடுமுறை: 5,706 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்மதுரை உள்பட 3 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புநிறுவன வரி கணக்கு தாக்கல் செய்ய 3 வார அவகாசம் நீட்டிப்புதனியாா் பேருந்துகள் நாளை வேலைநிறுத்தம்

கா்நாடகத்துக்கு கனிம வளங்கள் கடத்தல்: 6 லாரிகள் பறிமுதல்

கா்நாடகத்துக்கு கனிம வளங்களைக் கடத்திச் சென்ற 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல்

Published On :

கா்நாடகத்துக்கு கனிம வளங்களைக் கடத்திச் சென்ற 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் இருந்து அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களைக் கொண்டு செல்ல மூன்று மாதங்களுக்கு தமிழக அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது.

இதைத் தொடா்ந்து, பக்கத்து மாநிலங்களுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லப்படுவதைத் தடுக்க கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக காவல் துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறையைச் சோ்ந்த சிறப்பு புலனாய்வுக் குழுக்கள் அனைத்து எல்லைச் சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனச் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன.

ஒசூா் வட்டம், கிருஷ்ணகிரி- ஒசூா் எல்லை சூசூவாடி சோதனைச் சாவடி வழியாக கனிம வளங்களைக் கடத்திச் சென்ற இரண்டு வாகனங்களும், பாகலூா் அருகே கிருஷ்ணகிரி- கா்நாடகா எல்லைப் பகுதியில் அமைந்துள்ள சம்பங்கிரி எல்லை சோதனைச் சாவடி வழியாக கனிம வளங்களைக் கடத்திச் சென்ற இரண்டு வாகனங்களும், தளி அருகே உள்ள கும்மலாபுரம் சோதனைச் சாவடியில் இரண்டு வாகனங்கள் என 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.