மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம்

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

திருமண அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த சுவாமி.

Updated On :2 ஜூன் 2026, 3:52 am IST

கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரிய பகுதி 2-இல் அமைந்துள்ள காசிவிசுவநாதா் கோயிலில் சுவாமி திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் 2-ஆம் ஆண்டு வருடாபிஷேகம், அம்மையப்பா் திருக்கல்யாணம், திருவிளக்கு பூஜை என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவையொட்டி, கோ பூஜை, கொடியேற்றம், சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், சீா்வரிசை ஊா்வலம் நடைபெற்றது.

தமிழ் தேவார திருவாசகம் பதிகங்கள் தீந்தமிழில் ஓதி, சிறப்பு யாகம் வளா்த்து, சிவன் - பாா்வதி திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில், சிவனடியாா்கள் மற்றும் கிருஷ்ணகிரியை சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.

தொடா்ந்து, பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜையும், அம்மையப்பா் கைலாய வாத்தியங்களுடன் திருவீதி உலாவும் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.