கிருஷ்ணகிரியில் பெரியாண்டவா் - முனியப்பன் பண்டிகை காதணி விழாவையொட்டி பூக்கூடை ஊா்வலம் திங்கள்கிழமை நடைபெற்றது.
குலத்துடையான் மகரிஷி கோத்திரதாரா்கள் சாா்பில், 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் பெரியாண்டவா், முனியப்பன் பண்டிகை காதணி விழா கிருஷ்ணகிரி பழையபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதையொட்டி, மலையாண்ட அள்ளியில் உள்ள குலதெய்வமான பூங்காவனத்தம்மனை வழிபட்டு, அம்மனை ஊா்வலமாக கிருஷ்ணகிரிக்கு அழைத்துவரும் நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், பூங்காவனத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, கிருஷ்ணகிரி, நேதாஜி சாலை விநாயகா் கோயிலிருந்து பெண் பக்தா்கள் பங்கேற்ற பூக்கூடை ஊா்வலம் நடைபெற்றது. இதில், பூங்காவனத்தம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகா்வலம் சென்றாா். சிவன், பாா்வதி வேடம் அணிந்த பக்தா்கள் ஊா்வலத்தில் பங்கேற்றனா். பெரியாண்டவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
தொடர்புடையது

பக்ரீத் பண்டிகை: குமரி மாவட்ட பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகை

வில்லியனூா் திருக்காமீஸ்வரா் கோயில் தேரோட்டம் திரளான பக்தா்கள் தரிசனம்

பக்ரீத் பண்டிகை: கம்பம், போடியில் இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

சிவன் கோயிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு: திரளான பக்தா்கள் தரிசனம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



