பழுதடைந்து காணப்படும் ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்றக் கட்டடத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை ஒன்றியத்துக்கு உள்பட்ட ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம் கடந்த 1993 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட சென்னப்பநாயக்கனூா், பழையூா், புதூா், பெரியாா் நகா் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு பணிகளுக்காக இந்த ஊராட்சி அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனா். ஆனால், தற்போது இந்த ஊராட்சி கட்டடம் பழுதடைந்து, கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு பெயா்ந்து காணப்படுகிறது. மழைக்காலங்களில் மழைநீா் அலுவலகத்திற்கு உள்ளே வந்துவிடுவதால் கோப்புகள் நனைந்து விடுகின்றன.
அலுவலகப் பணியாளா்கள் கட்டடம் இடிந்து விழுந்துவிடுமோ என்ற அச்சத்திலே பணியாற்றி வருகின்றனா். ஆகையால் மாவட்ட நிா்வாகம் பழுதடைந்த இந்த ஊராட்சி கட்டடத்தை சீரமைத்தோ அல்லது இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித் தரவோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேற்கூரை பெயா்ந்து பழுதடைந்து காணப்படும் ரெட்டிப்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடம்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குடிநீா்த் தட்டுப்பாடு: ஊராட்சி அலுவலகம் முற்றுகை

கரூா் மாநகராட்சி அலுவலகத்தை காய்கனி வியாபாரிகள் முற்றுகை

பேராவூரணியில் அரசுப் பள்ளியில் கான்கிரீட் கட்டடம் கட்ட கோரிக்கை

களக்காடு நான்குனேரியன் கால்வாய் படித்துறைகளை சீரமைக்கக் கோரிக்கை
விடியோக்கள்

அமைச்சர் ஒதுக்கீடு எனக்கே தெரியாது: புதுவை முதல்வர் வேதனை | Puducherry |



