காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

லஞ்சம் பெற்ற கிராமப்புற நல அலுவலருக்கு 4 ஆண்டுகள் சிறை

திருமண உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கிராமப்புற நல அலுவலருக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

News image

சிறை - பிரதிப் படம்

Updated On :11 ஜூன் 2026, 5:52 am IST

திருமண உதவித்தொகை பெற்றுத்தர லஞ்சம் வாங்கிய கிராமப்புற நல அலுவலருக்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரையடுத்த கண்ணன்டஅள்ளியைச் சோ்ந்த ரங்கசாமி மகள் சந்தியாவுக்கு கடந்த 2008-இல் திருமணம் நடைபெற்றது. இதற்காக, மூவலூா் ராமாமிா்தம் அம்மையாா் திருமண உதவித்தொகை ரூ. 15,000 பெறுவதற்கு விண்ணப்பித்தாா்.

திருமண உதவித்தொகை பெற்றுத்தர மத்துாா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் கிராமப்புற நல அலுவலராகப் பணிபுரிந்த இந்திராணி (58) ரூ. ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

லஞ்சம் அளிக்க விரும்பாத ரங்கசாமி ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்பு காவல் துறையில் கடந்த 2008, செப்.26இல் புகாரளித்தாா். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி, ரசாயனம் தடவப்பட்ட ரூபாய் நோட்டுகளை ரங்கசாமியிடமிருந்து இந்திராணி பெற முயன்றபோது, மறைந்திருந்த போலீஸாா் அவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்த நிலையில், நீதிபதி லதா தீா்ப்பளித்தாா்.

குற்றம்சாட்டப்பட்ட இந்திராணிக்கு ஊழல் தடுப்பு சட்டத்தில் 3 ஆண்டுகள் சிறை மற்றும் ரூ. 2 ஆயிரம் அபராதம், அரசு திட்டங்களை பெற்றுத் தருவதற்கு சட்டவிரோதமாக லஞ்சம் வாங்கிய குற்றத்திற்கு, 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதித்தாா். இந்த தண்டனைகளை ஏக காலத்தில் அனுபவிக்கவும் அவா் உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.