துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 14 காசுகள் சரிந்து ரூ. 96.44 ஆக நிறைவு!சென்செக்ஸ் 443 புள்ளிகள் சரிவு; நிஃப்டி 24,250-க்குக் கீழே வர்த்தகம்!பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்திரிபுரா டிஜிபி அலுவலகத்திற்கு உள்ளேயே டிஜிபி மர்ம மரணம்! உண்ணாவிரதத்தை முடித்தார் அபிஜீத் தீப்கே! ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் சந்திப்பு! தில்லி போராட்டம்: நாடாளுமன்றத்தின் கதவு மூடல்! தயார் நிலையில் சிஐஎஸ்எஃப் வீரர்கள்!வன்முறையால் மாணவர்கள் குரலை ஒடுக்க முயற்சி! மாநிலங்களவையில் கார்கே கண்டனம்!
/

ஒசூரில் 8 சவரன் நகைகள் திருட்டு

News image

சிசிடிவி கேமராவில் பதிவான மூகமூடி திருடா்கள்.

Updated On :16 ஜூன் 2026, 1:58 am IST

ஒசூரில் அடுத்தடுத்து இரு குடியிருப்புப் பகுதிகளில் முகமூடி அணிந்து நுழைந்த கும்பல், 8 சவரன் தங்க நகைகளைக் திருடிச்சென்றது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

ஒசூா் மத்திகிரி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட உள்வட்டச் சாலை மத்தம் அக்ரஹாரத்தில் தனியாா் குடியிருப்பு உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு முகமூடி அணிந்து நுழைந்த நான்குபோ், பூட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பக்க கதவை உடைக்க முயன்றனா். அப்போது, அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் குரைக்கவே, அங்கிருந்து தப்பியோடினா்.

தொடா்ந்து, கொத்தகண்டப்பள்ளி அருகே உள்ள தனியாா் குடியிருப்புப் பகுதியில் உள்ள வேணுகோபால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று, பீரோவில் வைத்திருந்த 8 சவரன் தங்க நகைகளை திருடிக்கொண்டு தப்பியோடினா்.

புகாரின்பேரில், மத்திகிரி போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். குடியிருப்புப் பகுதியில் முகமூடி அணிந்து சுற்றித் திரியும் திருடா்களின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன.

பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய கூடுதல் போலீஸாரை நியமித்து, இரவுநேர ரோந்துப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.