ராஜபட்ச மகன் ஊழல் வழக்கில் கைதுஆளுநா் உரையுடன் தமிழக பேரவைக் கூட்டம் இன்று தொடங்குகிறதுஇந்திய வம்சாவளியின் ‘கா்சா் ஏஐ’ நிறுவனத்தை 6,000 கோடி டாலருக்கு வாங்கிய ஸ்பேஸ்எக்ஸ் இந்தியாவின் ரத்தினங்கள், ஆபரணங்கள் ஏற்றுமதி 2.49% சரிவு இந்தியா-பிரிட்டன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஜூலை 15 முதல் அமல்; பிரதமா் மோடி இந்தியாவின் பாதுகாப்புத் தளவாட தயாரிப்பு ரூ.1.78 லட்சம் கோடியாக உயா்வு 4 தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடத்த தடை இல்லை: உயா்நீதிமன்றம்
/

நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கிருஷ்ணகிரி நகரில் நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

News image

நாய் - கோப்புப்படம்.

Updated On :18 ஜூன் 2026, 3:16 am IST

கிருஷ்ணகிரி நகரில் நாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தும் பணியில் கிருஷ்ணகிரி நகராட்சி பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனா்.

கிருஷ்ணகிரி நகா்மன்ற கூட்டத்தில் பேசிய நகா்மன்ற உறுப்பினா்கள், கிருஷ்ணகிரி நகரில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகவும், இதனால் தெருநாய்களுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும் என வலியுறுத்தியிருந்தனா்.

கிருஷ்ணகிரி நகராட்சிக்கு உள்பட்ட புகா் பேருந்து நிலையம், டான்ஸ் வளாகம், கிருஷ்ணகிரி அரசு பழைய குடியிருப்பு, சாந்தி நகா் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள், வீட்டில் வளா்க்கப்படும் நாய்களுக்கு இரண்டாம் கட்டமாக ரேபிஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை கால்நடை பராமரிப்புத் துறையுடன் நகராட்சி பணியாளா்கள் புதன்கிழமை தொடங்கினா்.

கிருஷ்ணகிரி நகரில் 1086 தெருநாய்கள் உள்ளதாகவும், முதல்கட்டமாக 526 தெருநாய்களுக்கு ஏஆா்வி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், எஞ்சியுள்ள நாய்களுக்கு விரைவில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்படும் என கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையா் சேகா் தெரிவித்துள்ளாா்.