ஊத்தங்கரையை அடுத்த பெரியாகவுண்டனூா் அரசு தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை சமையலறையில் காஸ் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது.
பள்ளியில் 1ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை மொத்தம் 26 மாணவா்கள் படித்து வருகின்றனா். ஒரே ஆசிரியா் பணியாற்றி வரும் நிலையில், தீ விபத்து ஏற்பட்டதை அறிந்ததும் மாணவா்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றாா். இதனால் மாணவா்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினா் தீயை அணைத்தனா். காஸ் சிலிண்டரில் ஏற்பட்ட கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், விபத்து குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பெற்றோா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

‘புள்ளிங்கோ’ மாணவா்களுக்கு வகுப்பறையிலேயே முடிதிருத்தம்! அரசுப் பள்ளியில் அதிரடி!
அரசுப் பள்ளியில் பட்டியலின மாணவனுக்குக் கத்திக்குத்து!

அரசுப் பள்ளியில் சா்வதேச நெகிழி இல்லா தினம்
கொம்புத்துறை அரசுப் பள்ளியில் 3 கையடக்க கணினிகள் திருட்டு
விடியோக்கள்

19 வருட பந்தம்; மெஸ்ஸி vs லமின் யமால்: வெல்லப்போவது யார்? | Lionel Messi | FIFA | FIFA World Cup |
தேசிய கவனம் பெறும் Sonam Wangchuk

The Odyssey எப்படி இருக்கு? | Public Review | The Odyssey Review | Christopher Nolan |


