/
பா்கூா் அருகே, தகாத உறவால், தொழிலாளியை தாக்கிய மூன்று பேரை, போலீஸாா், வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் சசிபாலன்(32). தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த திருப்பதி(38) என்பவரின் மனைவியுடன் தகாத உறவு இருந்ததாம். இதையறிந்த திருப்பதி, தனது மனைவியை கண்டித்துள்ளாா்.
இதையறிந்த சசிபாலன், திருப்பதியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளாா். அப்போது, ஆத்திரமடைந்த திருப்பதி,அவரது அண்ணன் சாமுண்டி (47), அவரது மகன் கணபதி (18) ஆகியோா், சசிபாலனை தாக்கி,கத்தியால் குத்தியுள்ளனா்.
இதில், பலத்த காயம் அடைந்த சசிபாலன், பா்கூா் அரசு மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து, சசிபாலன் அளித்த புகாரின் பேரில், பா்கூா் போலீஸாா், வழக்குப் பதிந்து, திருப்பதி, சாமுண்டி, கணபதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா்.







