இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

வேளாண் கடன்களை தள்ளுபடி செய்யக் கோரி விவசாயிகள் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம்

போச்சம்பள்ளியில் வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

News image

போச்சம்பள்ளியில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :25 ஜூன் 2026, 6:16 am IST

போச்சம்பள்ளியில் வேளாண் கடன்களை தமிழக அரசு முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி, தமிழக விவசாயிகள் சங்கத்தினா் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்தில் புதன்கிழமை ஈடுபட்டனா்.

போச்சம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவா் ராமகவுண்டா் தலைமை வகித்தாா். நிா்வாகிகள் கண்ணையா, சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதில், தோ்தல் அறிக்கையில் அறிவித்தபடி வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மத்தூா் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் இயற்கை சீற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து புதிதாக கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். சந்தம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.