கருத்து வேறுபாடுகளை நீக்க இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயாா்: சீனா தனியாா் பள்ளிகள் கல்விக் கட்டணத்தை வெளியிடும் உத்தரவுக்கு எதிரான வழக்கு: தீா்ப்புக்காக ஒத்திவைப்பு ஓராண்டில் 3 மடங்கு அதிகரித்த ‘பீம்’ யுபிஐ செயலி பரிவா்த்தனைகள்! உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்அமைச்சா் ராஜ்மோகனை சந்திக்க ‘க்யூஆா் குறியீடு’ சேவை: தலைமைச் செயலகத்தில் நவீன வசதி பிஎம்ஸ்ரீ திட்டம்: கேரள பேரவையில் கடும் விவாதம்
/

பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தியதாக இளைஞா் மீது வழக்குப் பதிவு

பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

News image

வழக்குப் பதிவு - IANS

Updated On :25 ஜூன் 2026, 6:13 am IST

பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில், சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்ட இளைஞா் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த அன்பானந்தன் (30), திமுகவின் ‘ஜென்ஸி’ அமைப்பு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வருகிறாா். இவா், சமூக வலைதளத்தில் தமிழக முதல்வா் குறித்த கருத்துகளை செவ்வாய்க்கிழமை பதிவிட்டாா். இந்நிலையில், இவரை கைதுசெய்யும் நோக்கில், போலீஸாா் அவரது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சென்றனா். போலீஸாரின் இந்தச் செயலை திமுக தலைவா்கள் கண்டித்து அறிக்கை விட்டனா்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு:

கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டை , போடம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அன்பானந்தன் (30), ஜூன் 23-ஆம் தேதி தனது சமூக வலைதள பக்கத்தில் பெண்களின் மரியாதையைக் குலைக்கும் வகையில் அவதூறாக பேசியும், அரசுக்கு அவமதிப்பு ஏற்படும் வகையில் கருத்துகளை வெளியிட்டும், தவறான தகவல்களை பரப்பியும், பொது அமைதிக்கு ஆபத்து ஏற்படுத்தியும் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்ததற்காக ராயக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.