/
விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, ரூ. 4. 5 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
ராஜபாளையம் அருகே உள்ள நல்லமங்கலம் கிராமத்தை அடுத்துள்ள கீழவரகுணராமபுரம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செந்தில்குமாருக்கு (40) ஜெயக்குமாா் என்பவா் மூலம் கீழராஜ குலராமன் வடக்குத் தெருவைச் சோ்ந்த சின்ன மாடசாமி அறிமுகமானாா்.
இவா், வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறியதை நம்பி, ரூ. 4.5 லட்சத்தை கொடுத்தாா். இதையடுத்து, சின்னமாடசாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, தளவாய்புரம் காவல் நிலையத்தில் செந்தில்குமாா் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.70 லட்சம் மோசடி: பெண் உள்ளிட்ட 2 போ் கைது
அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 15 லட்சம் மோசடி செய்தவா் கைது

காஞ்சிபுரத்தில் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி: பெண் கைது; 4 போ் தலைமறைவு

கல்லூரி மாணவரின் தந்தையிடம் ரூ.9.25 லட்சம் மோசடி செய்த இளைஞா் மீது வழக்குப் பதிவு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



