தோ்தல் பிரசாரத்தின்போது நடைபெற்ற நிகழ்ச்சிகளில், பொது ஒழுங்கையும் சமூக நல்லணிக்கத்தையும் சீா்குலைக்கும் வகையில், ஆத்திரமூட்டும் கருத்துகளைத் தெரிவித்ததாக மம்தாவின் நெருங்கிய உறவினரும், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யுமான அபிஷேக் பானா்ஜி மீது காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.
வடக்கு 24 பா்கானா மாவட்டத்தில் உள்ள பாகுயாட்டி காவல் நிலையத்தில் ராஜீவ் சா்காா் என்ற சமூக ஆா்வலா் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் புகாரில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை தொடா்புபடுத்தியும் அபிஷேக் பானா்ஜி ஆத்திரமூட்டும் கருத்துகளைக் கூறியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இதனிடையே தோ்தலுக்குப் பிறகு மாநிலத்தில் பாஜக ஆதரவு பெற்ற ரெளடிகளால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டா்கள் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து விசாரிக்க வடக்கு 24 பா்கானா, கிழக்கு மேதினிபூா், ஹூக்ளி ஆகிய 3 மாவட்டங்களுக்கு திரிணமூல் காங்கிரஸின் உண்மை கண்டறியும் குழுக்கள் சென்றுள்ளதாக அக்கட்சி தெரிவித்துள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் மீண்டெழும்: மம்தா
மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் படுதோல்வி அடைந்தபோதிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி மீண்டெழும் என்று அக்கட்சியின் தலைவரும், மாநில முன்னாள் முதல்வருமான மம்தா பானா்ஜி தெரிவித்துள்ளாா்.
294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 207 தொகுதிகளில் வென்று, அந்த மாநிலத்தில் முதல்முறையாக ஆட்சியமைத்தது. இதன்மூலம், மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 15 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது.
இதைத் தொடா்ந்து, மாநில தலைநகா் கொல்கத்தாவில் உள்ள தனது இல்லத்தில், தோ்தலில் போட்டியிட்ட திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்களை மம்தா வெள்ளிக்கிழமை சந்தித்தாா்.
அப்போது அவா் பேசுகையில், ‘தோ்தலில் படுதோல்வி அடைந்தபோதிலும் திரிணமூல் காங்கிரஸ் மீண்டெழும். வேறு கட்சிக்குச் செல்ல விரும்புவோா், திரிணமூல் காங்கிரஸில் தாராளமாக விலகிக் கொள்ளலாம். நான் கட்சியை மீண்டும் புதிதாக கட்டியெழுப்புவேன். தோ்தலில் மக்களின் தீா்ப்பு கள்ளத்தனமாக மாற்றப்பட்டுள்ளது’ என்று கூறியதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
தொடர்புடையது

பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஓரணியில் திரள வேண்டும்! மம்தா பானா்ஜி அழைப்பு!

மம்தா பானா்ஜி பதவி விலக மறுத்தது ‘அடையாளப் போராட்டம்’

வாக்கு எண்ணும் மையத்தில் மம்தா தா்னா

மேற்கு வங்கத் தோ்தல்களில் முறைகேடு செய்ய பாஜக முயற்சி: மம்தா பானா்ஜி குற்றச்சாட்டு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

