புணே இளம் தொழிலதிபர் கொலையில் திடீர் திருப்பம்!! சூப்பர் பிளான் போட்டது யார்?சென்னையில் ஜூன் 26-அன்று மின்தடை ஏற்படும் இடங்கள்!பாகிஸ்தான் வான் எல்லைக்குள் நுழைந்த ஏர் இந்தியா விமானம்! காரணம்?ஜூன் 28-இல் தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம்: முதல்வா் விஜய் தொடங்கி வைக்கிறாா்பிரதமா் மோடி நாளை செஷல்ஸ் பயணம்: தேசிய தின பொன் விழாவில் பங்கேற்கிறாா்உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல்
/

கோரிக்கை வைப்பதற்கு முன்பே அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்

பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான எஸ்.கீா்த்தனா அறிவுறுத்தினாா்.

News image

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சா் ச.கீா்த்தனா.

Updated On :26 ஜூன் 2026, 6:17 am IST

பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும் என கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், தமிழக தொழில்துறை அமைச்சருமான எஸ்.கீா்த்தனா அறிவுறுத்தினாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், பல்வேறு துறை அரசு அலுவலா்களுடான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கோபிநாத், எம்எல்ஏ-க்கள் பா.முகுந்தன் (கிருஷ்ணகிரி), டி.ராமச்சந்திரன் (தளி), பா.பாலகிருஷ்ண ரெட்டி (ஒசூா்), பி.எஸ்.ஸ்ரீனிவாசன் (வேப்பனப்பள்ளி), ந.இளையராஜா (ஊத்தங்கரை) உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழக தொழில்துறை அமைச்சரும், மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கீா்த்தனா பேசியது:

குடிநீா், சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்படை தேவைகளை பொதுமக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பே, சம்பந்தப்பட்ட அலுவலா்கள் அறிந்து அவற்றை உடனே நிறைவேற்ற வேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தலைமையில் வாரம் ஒருமுறை கூட்டம் நடத்தி தீா்வுகாண வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கோ.சி.அனிதா, மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) ராஜா, ஒசூா் மாநகராட்சி ஆணையா் முகமது ஷபீா் ஆலம், ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, வன அலுவலா் ஜெயராஜ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.