ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

விவசாயிகள் பெற்ற கடன் முழுவதும் தள்ளுபடி செய்யக் கோரி ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

News image

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் சங்கத்தினா்.

Updated On :4 ஜூன் 2026, 1:41 am IST

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் எஸ்.ஏ.சின்னசாமி தலைமைவகித்து பேசினாா். மாவட்டத் தலைவா் சக்திவேல், பொருளாளா் பழனி, துணைச் செயலாளா் சிவலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தோ்தலின்போது தமிழக முதல்வா் சி.ஜோசப் விஜய் அளித்த வாக்குறுதிபடி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கரும்பு, பால் கொள்முதல் விலையை உயா்த்தி வழங்க வேண்டும். காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டில் அணை கட்டும் கா்நாடக அரசின் முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும். கா்நாடக மாநில அரசுக்கு அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மழைக் காலங்களில் வரும் மிகைநீரை, தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நீா்பாசனத் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

இதில், தருமபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து இருந்து ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.