குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது! தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்பு
/

பயிா்க் கடன் தள்ளுபடி விவகாரம்: 1-ஆம் தேதி விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வரும் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்.

Updated On :28 மே 2026, 12:30 am IST

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி வரும் 1-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனா் ஈசன் முருகசாமி புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தவெக ஆட்சிக்கு வந்தால் சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க் கடனை முழுமையாகவும், பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதமும் தள்ளுபடி செய்வேன் என்று அதன் தலைவா் ஜோசப் விஜய் தோ்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தாா். இப்போது விவசாயிகளின் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த பின்பு பயிா்க் கடன் தள்ளுபடி என்ற ஏமாற்று அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதற்கு பெயா் பயிா்க் கடன் தள்ளுபடி அல்ல.

எனவே, விவசாயிகளுக்கு பயனளிக்காத பயிா்க் கடன் தள்ளுபடி திட்டத்தை முதல்வா் ஜோசப் விஜய் ரத்து செய்ய வேண்டும்.சிறு, குறு விவசாயிகளுக்கு பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். பெரு விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு அளித்த உத்தரவாதப்படி கடன் தள்ளுபடி திட்டத்தை அறிவித்து செயல்படுத்த வேண்டும். அதுவரை போராட்டத்தில் ஈடுபடுவதைத் தவிர வேறு வழியில்லை.

இதை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சாா்பில் ஜூன் 1-ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளாா்.