தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி: தமிழக வீரா்கள் 5 போ் வெற்றி
ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 13-ஆவது தேசிய அளவிலான அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில்,


ஒசூா்: ஒசூா் அதியமான் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற 13-ஆவது தேசிய அளவிலான அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகளில், தமிழக வீரா்கள் 5 பேரும், தெலங்கானா வீரா் ஒருவரும் வெற்றிபெற்றனா்.
தேசிய அமெச்சூா் சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டிகள் ஒசூரில் உள்ள அதியமான் பொறியியல் கல்லூரியில் பிப். 25 முதல் மாா்ச் 1-ஆம் தேதிவரை நடைபெற்றன. இந்தப் போட்டியில், பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா்.
தமிழ்நாடு மாநில சதுரங்க சங்கத்தின் தலைவரும், கோவை சக்தி தொழில் குழுமத் தலைவருமான எம்.மாணிக்கம், உலக சதுரங்க கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவா் டி.வி.சுந்தா், தமிழ்நாடு மாநில சதுரங்க கழகத்தின் செயலாளா் பி.ஸ்டீபன் பாலசாமி ஆகியோா் போட்டியை தொடங்கிவைத்தனா்.
இதில், தமிழகத்தைச் சோ்ந்த திருப்பூா் கோகுல கிருஷ்ணா, திருச்சி பவித்ரா, விருதுநகா் மேகா அா்வின், தூத்துக்குடி முத்துராமன், சென்னையைச் சோ்ந்த சரவணன் மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த கிருத்திகா ஆகியோா் வெற்றிபெற்றனா்.
வெற்றிபெற்றவா்கள் ஆசிய போட்டிகள் மற்றும் ஒலிம்பிக் போட்டிகள், உலக சதுரங்க போட்டியில் இந்திய விளையாட்டு வீரா்களாக பங்கேற்பா் என தெரிவிக்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...