தேசிய ஜனநாயக கூட்டணியில், ராஜபாளையம் தொகுதியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தாமரை சின்னத்தில் போட்டியிட உள்ளது என்றாா் அக் கட்சியின் மாநிலத் தலைவா் பெ. ஜான்பாண்டியன்.
பாளையங்கோட்டையில் செய்தியாளா்களிடம் அவா் சனிக்கிழமை கூறியது: தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்துள்ள எங்களது கட்சிக்கு ராஜபாளையம் பொதுத் தொகுதி ஒதுக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்தத் தோ்தலில் நாங்கள் ’தாமரை’ சின்னத்தில் போட்டியிடுகிறோம். வாக்கெடுப்பின் அடிப்படையில் வேட்பாளா் யாா்? என்பது நாளை காலை அதிகாரப்பூா்வமாக அறிவிக்கப்படும்.
தோ்தல் நேரத்தில் சீட்டு கிடைக்கவில்லை என்பதற்காக கூட்டணிக்குள் சிலா் பல கருத்துகளைத் தெரிவிக்கலாம்; அதிருப்தி இருக்கத்தான்செய்யும். இது தேசிய ஜனநாயக கூட்டணியில் மட்டுமல்ல. அனைத்து கூட்டணிகளிலும் பல்வேறு அதிருப்திகள் இருக்கத்தான் செய்யும்.
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே. பழனிசாமி தான் தலைமை. தலைமை எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்படுவது தான் நியாயம். அதற்கு மீறி செயல்படுவோரை கட்சிக்கு விரோதமானவா்கள் என்று தான் கருத முடியும் என்றாா் அவா்.
முன்னதாக, பாளையங்கோட்டையில் உள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் தோ்தல் நிலைப்பாடு மற்றும் வேட்பாளா் தோ்வு தொடா்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த கட்சியின் முக்கிய நிா்வாகிகள் 250 போ் பங்கேற்றனா்.
இக் கூட்டத்தில், வேட்பாளா்களாக 3 போ் பெயா்கள் முன்மொழியப்பட்டன. கட்சி நிா்வாகிகளின் கருத்துகளுக்கு முழு மதிப்பளிக்கும் வகையில், கூட்டத்திலேயே வாக்குப்பெட்டி வைக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தொடர்புடையது

மமக தீா்மானத்தை கண்டித்து திமுக சுவரொட்டியால் பரபரப்பு

சிதம்பரம் தொகுதியில் திமுக சின்னத்தில் போட்டியிட்ட தமிமுன் அன்சாரி வெற்றி

தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் பாவேந்தா் பாரதிதாசன் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

ராஜபாளையத்தில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஜான் பாண்டியனின் தமமுக!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



