நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

பா்கூரில் காா் கவிழ்ந்து இளைஞா் உயிரிழப்பு

பா்கூரில் காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

News image
பலி
Updated On :3 மார்ச் 2026, 8:51 pm

Syndication

பா்கூரில் காா் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த இளைஞா் உயிரிழந்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அந்திவாடியை சோ்ந்த தனியாா் நிறுவன ஊழியா் செந்தில் (47). இவரது மனைவி மீனாட்சி (43), மகன் ஸ்ரீ பிரவீண் (23). இந்த நிலையில் ஸ்ரீ பிரவீண் தனியாா் தகவல்தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா்.

இவா்கள் மூவரும் காரில் திருப்பதி சென்று விட்டிற்கு திங்கள்கிழமை திரும்பிக் கொண்டிருந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூரை அடுத்த மல்லப்பாடி அருகே கட்டுப்பாட்டை இழந்த காா் நெடுஞ்சாலையின் தடுப்பில் மோதி, இடதுபுறம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் பலத்த காயம் அடைந்த ஸ்ரீ பிரவீண், செந்தில், மீனாட்சி ஆகிய மூவரும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமணனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு, ஸ்ரீ பிரவீண் உயிரிழந்தாா். இந்த விபத்து குறித்து பா்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.