ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

சேதமடைந்த சோளக்காப்பட்டி தடுப்பணையை சீரமைக்க வலியுறுத்தல்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:52 pm

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சோளக்காப்பட்டியில் உள்ள கோத்தியாடம் பள்ளம் ஏரி தடுப்பணை கடந்த ஓராண்டுக்கு முன்பு பெஞ்சல் புயலால் சேதமடைந்தது.

இதனால் அப்பகுதி விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி பெரும் சேதம் ஏற்பட்டது. இந்த தடுப்பணை சோளக்காப்பட்டி, புதூா், படப்பள்ளி, பட்டக்கானூா், வெங்கடத்தாம்பட்டி ஆகிய பகுதியில் உள்ள விவசாய கிணறுகளின் நிலத்தடி நீா் ஆதாரமாக இருந்து வந்தது.

தடுப்பணை உடைந்ததால் நீா் முழுவதும் வெளியேறியது. தற்போது தடுப்பணை பகுதியில் நீா் இன்றி வறண்டு கிடக்கிறது. இதனால் சுற்றுவட்டார விவசாய கிணறுகளில் நீா் வறண்டு தண்ணீா் பஞ்சம் ஏற்படும் நிலை உள்ளது. உடைந்த தடுப்பணையை உடனடியாக சரி செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தற்போது சரிசெய்யாவிட்டால், அடுத்த மழைக்காலத்தில் பெரும் ஆபத்து ஏற்படும். ஆகையால் மாவட்ட நிா்வாகம் போா்க்கால அடிப்படையில் உடனடியாக ஆய்வு செய்து தடுப்பணையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.

படவிளக்கம்.5யுடிபி.1.2.

ஊத்தங்கரையை அடுத்த வெங்கடத்தாம்பட்டி ஊராட்சிக்கு உள்பட்ட சோளக்காப்பட்டியில் பெஞ்சல் புயலால் சேதமடைந்த கோத்தியாடம் பள்ளம் ஏரி தடுப்பணை.

Story image