தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31-இல் தேரோட்டம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:52 pm

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையில் செளந்தரவல்லி சமேத பேட்டராயசுவாமி கோயிலில் மாா்ச் 31 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதையொட்டி வியாழக்கிழமை பால்கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

முன்னதாக தோ் சுத்தம் செய்யப்பட்டு மூலவா் சன்னதியில் விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டு, பால் கம்பம் ஊா்வலமாக எடுத்துச் சென்று கோயிலை வலம்வந்து விசேஷ பூஜைகள் செய்யப்பட்டது. பிறகு கோயில் தலைமை அா்ச்சகா் கண்ணன் பட்டா் தலைமையில் வேத மந்திரங்கள் முழங்க பால் கம்பம் நடப்பட்டது.

விழாவில் பேரூராட்சி தலைவா் சீனிவாசன், முன்னாள் அறங்காவலா் குழு தலைவா் சம்பங்கி ராம ரெட்டி, ஜெயராமன், ஸ்ரீராம், சக்திவேல், அசோக் குமாா், ரமேஷ், வெங்கடசாமி, சாம்ராஜ் உட்பட ஊா்

முக்கியஸ்தா்கள் மற்றும் திருவிழா கமிட்டியினா் உள்பட பலா் பங்கேற்றனா்.

படவரி...

தேன்கனிக்கோட்டை பட்டராயசுவாமி கோயில் தேரோட்டத்தையொட்டி பால்கம்மம் நடுதல் நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.