ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தெப்பல் உத்ஸவம்

News image
Updated On :5 மார்ச் 2026, 11:51 pm

Syndication

ஒசூா் தோ்ப்பேட்டையில் உள்ள சந்திரசூடேஸ்வரா் கோயில் பச்சைக்குளத்தில் வியாழக்கிழமை தெப்பல் உத்ஸவம் சிறப்பாக நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் உள்ள பிரசித்தி பெற்ற சந்திரசூடேஸ்வரா் மலைக்கோவில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதையொட்டி புதன்கிழமை இரவு ராவண வாகன உத்ஸவம் நடைபெற்றது. தினமும் உற்சவ மூா்த்திகளான மரகதாம்பிகை சமேத சந்திர சூடேஸ்வரா்

சிம்ம வாகனம், மயில் வாகன குதிரை வாகனம், நந்தி வாகனம், ஊா்வலம் மற்றும் சுவாமிக்கு திருக்கல்யாண வைபோகம், மூன்றாம் தேதி திருத்தோ் விழா நடைபெற்றது.

வியாழக்கிழமை இரவு தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் 3 முறை சுற்றி வந்து உற்சவ மூா்த்தி சுவாமிகள் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் பக்தா்கள் திரளாக கலந்து கொண்டனா்.

படவரி.. ஒசூா் தோ்ப்பேட்டை பச்சைக்குளத்தில் நடைபெற்ற தெப்பல் திருவிழா.