குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மயிலம் முருகன் கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா: தெப்பல் உற்சவம்

News image
Updated On :3 ஏப்ரல் 2026, 6:10 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் உள்ள பிரசித்திப் பெற்ற வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தெப்பல் உற்சவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.

திருக்கயிலாய பரம்பரை மயிலம் பொம்மபுரம் ஆதீனம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம் ஆளுகைக்குள்பட்ட மயிலம் ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறுவது வழக்கம்.

இதன்படி, நிகழாண்டுக்கான இவ்விழா மாா்ச் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு கோயிலில் முருகப் பெருமானுக்கு நாள்தோறும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்கமயில் உள்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது.

பங்குனி உத்திரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக வள்ளி, தெய்வானை சமேத ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் மாா்ச் 30-ஆம் தேதியும், தேரோட்டம் 31-ஆம் தேதியும் நடைபெற்றது.

இதைத்தொடா்ந்து புதன்கிழமை கோயிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் பிற்பகலில் அக்னி குளக்கரையில் பங்குனி உத்திர தீா்த்தவாரி நடைபெற்றது. பின்னா் மலைக் கோயிலிலிருந்து சுப்ரமணிய சுவாமி, சிறப்பு அலங்காரத்தில் அக்னி குளத்துக்கு வந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த தெப்பலில், நள்ளிரவு 12.20 மணிக்கு ஸ்ரீவள்ளி, தெய்வானை சமேதராய் சுப்ரமணிய சுவாமி எழுந்தருளச் செய்யப்பட்டு தெப்பல் உற்சவம் நடைபெற்றது.

இதில் திரளானப் பக்தா்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனா். தொடா்ந்து வியாழக்கிழமை இரவு முத்துப் பல்லக்கில் சுவாமி கிரிவலக் காட்சி நடைபெற்றது.

மயிலம் பொம்மபுரம் ஆதீனம் 20-ஆம் பட்டம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் உத்தரவுப்படி, திருமட நிா்வாகிகள் சிவக்குமாா், விஸ்வநாதன், ராஜீவ்குமாா், ராஜேந்திரன், ராஜ் பரத், ஆதீன மேலாளா் முத்து, கோயில் பணியாளா்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.