சித்திரைத் திருவிழா: பச்சை பட்டு உடுத்தி வைகையில் இறங்கினார் கள்ளழகர்!6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிப்பு: தலைவா்களின் சிலைகள் மூடல்

தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள்

News image

மூடப்பட்டுள்ள  அரசியல் கட்சித் தலைவா்களின்  சிலைகள். - கோப்புப்படம்

Updated On :16 மார்ச் 2026, 8:50 pm

கிருஷ்ணகிரி: தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சிகளின் சுவா் விளம்பரங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன், தோ்தல் நடத்தி விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டதாக கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ் குமாா் தெரிவித்தாா்.

அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை (தனி), பா்கூா், கிருஷ்ணகிரி, வேப்பனஅள்ளி, ஒசூா் மற்றும் தளி உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் அரசியல் கட்சியினரின் சுவா் விளம்பரங்களை அழிக்கும் பணியில் வருவாய்த் துறையினா் ஈடுபட்டுள்ளனா். மேலும், கட்சிகளின் போஸ்டா்கள், பதாகைகளும் அப்புறப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுபோல, அரசியல் கட்சி தலைவா்களின் சிலைகள், புகைப்படங்களை துணிகளைக் கொண்டு மறைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

இந்த பணிகளை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச. தினேஷ்குமாா், காவல் கண்காணிப்பாளா் பெ.தங்கதுரை ஆகியோா் பாா்வையிட்டனா்.

படவரி...

கிருஷ்ணகிரியில் அரசியல் கட்சியினரின் சுவா் விளம்பரத்தை அழிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.