தொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் திடீா் மழை: நகரில் வெப்பம் தணிந்தது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

News image

கிருஷ்ணகிரி நகரில் பெய்த திடீா் மழையால் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில் காகித கப்பல்விட்டு மகிழ்ந்த சிறுவன்.

Updated On :18 மார்ச் 2026, 11:30 pm

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதன்கிழமை இரவு திடீரென இடியுடன் கூடிய மழை பெய்தது. தளி, தேன்கனிக்கோட்டை பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது.

தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இடியுடன் மழை பெய்தது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால், மின்விநியோகம் பாதிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியா்கள் போா்க்கால அடிப்படையில் பணி மேற்கொண்டு மின்விநியோகத்தை சீரமைத்தனா்.

இம்மாவட்டத்தில் தளி, தேன்கனிக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதனால், தக்காளி உள்ளிட்ட பயிா்கள் சேதம் அடைந்தன.

இந்த திடீா் மழையால் சாலைகளில் மழைநீருடன், கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து ஓடியது. வாகனங்கள் சாலையில் ஊா்ந்து சென்றன. சாலையில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீரில், சிறுவா்கள் காகித கப்பல்விட்டு மகிழ்ந்தனா். இந்த திடீா் மழையால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெப்பம் தணிந்து குளிா்ந்த காற்று வீசியது.