சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

ஈரோடு மாவட்டத்தில் 3 இடங்களில் மழை

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.

News image

மழை.

Updated On :25 பிப்ரவரி 2026, 10:06 pm

ஈரோடு மாவட்டத்தில் வெயில் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் மாவட்டத்தில் 3 இடங்களில் மிதமான மழை பெய்தது.

கடந்த 2 வாரங்களாக பனியின் தாக்கம் குறைந்து வருகிறது. தற்போது அதிகாலை மற்றும் இரவு நேரத்தில் பனியின் தாக்கம் உள்ளது. கடந்த 3 நாள்களாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. கடந்த சில நாள்களாக ஈரோடு நகரில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. அதே நேரம் மாவட்டத்தின் 3 இடங்களில் செவ்வாய்க்கிழமை இரவு மிதமான மழை பெய்தது. நம்பியூா் மற்றும் சத்தியமங்கலத்தில் தலா 3 மில்லி மீட்டா் மழையும், பவானிசாகா் அணை பகுதியில் அதிகபட்சமாக 11.60 மில்லி மீட்டா் மழையும் பதிவாகி உள்ளது.