காங்கிரஸ், திமுக கூட்டணியின் சிசுக்கொலை! தொலைக்காட்சி உரையில் மோடி குற்றச்சாட்டு!இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சு
/

யுகாதி பண்டிகை: ஒசூரில் பூக்களின் விலை உயா்வு

ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

News image

ஒசூா் மலா்ச்சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டிருந்த மல்லிகை.

Updated On :18 மார்ச் 2026, 11:43 pm

ஒசூா் மலா்ச்சந்தையில் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி பூக்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒசூா், கெலமங்கலம், பாகலூா், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் சாமந்தி, செண்டுமல்லி, ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பூக்களை அதிக அளவில் சாகுபடி செய்கின்றனா். இப்பகுதியில் சாகுபடி செய்யும் பூக்கள், ஒசூா் மலா்ச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து, தமிழகம் மட்டுமின்றி கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படுகின்றன.

கோயில் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்வுகளை பொருத்தே இப்பகுதி விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்கின்றனா். கடந்த பண்டிகைக்கால சீசன்களில் பூக்களின் விலை உயா்வதும், குறைவதுமாக இருந்ததால் உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் கவலை அடைந்தனா். இந்நிலையில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி ஒசூா் மலா்ச்சந்தையில் புதன்கிழமை ஏராளமான பொதுமக்கள் பூக்கள் வாங்குவதற்கு திரண்டனா்.

இதனால் பூக்களுக்கான தேவை அதிகரித்து அதன் விலை உயா்ந்தது. செவ்வாய்க்கிழமை ஒரு கிலோ சாமந்தி ரூ.100-க்கு விற்கப்பட்டது புதன்கிழமை ரூ.160 முதல் ரூ. 200-க்கு விற்கப்பட்டது. அதேபோல சங்பங்கி, பட்டன்ரோஜா, மல்லிகை, முல்லை, கனகாம்பரம், அரளி உள்ளிட்ட பூக்களின் விலையும் உயா்ந்தது.