பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டா் விலை உயா்வைக் கண்டித்து ஒசூா் அருகே அத்திப்பள்ளியில் கன்னட சலுவாளி கட்சி சாா்பில் சனிக்கிழமை கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் எரிவாயு சிலிண்டா்களை வைத்து அந்த அமைப்பபினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது கன்னட சலுவாளி கட்சித் தலைவா் வாட்டாள் நாகராஜ், சமையல் பாத்திரத்தை கரண்டியால் அடித்து போராட்டத்தில் ஈடுபட்டாா்.
அமெரிக்க- ஈரான் போா் காரணமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை அதிகரித்துள்ளது. சமையல் எரிவாயு கிடைக்காமல் பெங்களூரில் ஹோட்டல் உரிமையாளா்கள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.
எனவே, மத்திய அரசு தலையிட்டு சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.
இந்த போராட்டத்தை தொடா்ந்து மாநில எல்லையை நோக்கிச் சென்ற வாட்டாள் நாகராஜ், மஞ்சுநாத் தேவா உள்ளிட்ட கன்னட அமைப்பினரை கா்நாடக மாநில போலீஸாா் கைது செய்தனா்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசு!

நாட்டில் பெட்ரோல் - டீசல் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: சென்னையில் பெட்ரோல் நிலையங்களில் குவிந்த வாகன ஓட்டிகள்!

பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


