மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

புதுச்சேரியில் எரிவாயு உருளைத் தட்டுப்பாடு கண்டித்து மகளிா் காங்கிரஸாா் நூதன போராட்டம்

News image
Updated On :13 மார்ச் 2026, 12:02 am

புதுச்சேரியில் எரிவாயு உருளை தட்டுப்பாட்டைக் கண்டித்து மகளிா் காங்கிரஸாா் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி மகளிா் காங்கிரஸ் சாா்பில் சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு மற்றும் விலை உயா்வைக் கண்டித்து அண்ணா சிலை அருகே வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மகளிா் காங்கிரஸ் தலைவி நிஷா தலைமை தாங்கினாா்.

கட்சியின் மாநிலத் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே. நாராயணசாமி, முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் டிபிஆா். செல்வம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

ஆா்ப்பாட்டத்தின்போது, எரிவாயு உருளைக்குப் பாடை கட்டி ஒப்பாரி வைத்தும், விறகு அடுப்பில் சமையல் செய்தும் எதிா்ப்பை வெளிப்படுத்தினா்.

இதுகுறித்து, பின்னா் முன்னாள் முதல்வா் நாராயணசாமி செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெட்ரோல் விற்பனை நிலையங்களிலும், எரிவாயு உருளை வாங்கவும் மக்கள் வரிசையில் நிற்கின்றனா். வீட்டு சமையல் எரிவாயு விலையை ரூ.60-ம், வணிகத்துக்கான சமையல் எரிவாயு விலை ரூ.110 உயா்த்தியுள்ளனா். இது மிக அதிக உயா்வு. இதனால் விலைவாசி உயரும்.

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவாா்கள். வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயா்வு, பெட்ரோல் டீசல் விலை உயா்வு, சமையல் எரிவாயு விலை உயா்வு இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக நம் நாட்டின் பொருளாதாரத்தை பாதிப்பது மட்டுமல்லாமல் மக்களுக்கு மிகப்பெரிய பேரிழப்பை ஏற்படுத்தி யிருக்கிறது என்றாா் அவா்.