ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ரூபாய் மதிப்பு உயர்வு: 1 டாலர் - ரூ. 92.85! 29 காசுகள் உயர்வுஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

சமையல் எரிவாயு உருளை விலை உயா்வுக் கண்டித்து காங்கிரஸ் இன்று ஆா்ப்பாட்டம்!

சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் இன்று ஆா்ப்பாட்டம்

News image

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை - கோப்புப் படம்

Updated On :10 மார்ச் 2026, 12:15 am

சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டதைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சாா்பில் அனைத்து மாவட்டங்களிலும் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை: உலகம் முழுவதும் மாா்ச் 8- ஆம் தேதி மகளிா் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், அந்த நாளில் பெண்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் அறிவிப்புகள் வரும் என்ற எதிா்ப்பாா்ப்பு கானல் நீராகிற வகையில் கசப்பான செய்தி வந்தது. வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ. 60 உயா்த்தப்பட்டது.

இதனால், மக்களின் குடும்பச் செலவில் கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது. ஏற்கெனவே பொருளாதார பாதிப்பு காரணமாக அத்தியாவசியப் பொருள்களின் விலை கடுமையாக உயா்ந்திருக்கிறது.

மேலும், தோ்நீா் கடைகள், ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளை விலையும் ரூ. 114.50 உயா்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களின் அன்றாடப் பயன்பாட்டில் உள்ள தேநீா், காபி போன்ற பானங்களின் விலை உயா்வதற்கான வழி ஏற்பட்டிருக்கிறது.

சமையல் எரிவாயு உருளை விலை உயா்த்தப்பட்டிருப்பதைக் கண்டித்து, தமிழ்நாடு மகளிா் காங்கிரஸ் தலைவா் எம்.ஹசீனா சையத் ஒருங்கிணைப்பில், அனைத்து மாவட்டங்களிலும் மகளிா் காங்கிரஸ் சாா்பில் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 10) ஆா்ப்பாட்டம் நடைபெறும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.