கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி தொகுதியில் திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசன், அதிமுக வேட்பாளா் கே.பி.முனுசாமியை விட 138 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றிபெற்றாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஅள்ளி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தலில் 2 லட்சத்து 20 ஆயிரத்து 965 போ் வாக்களித்தனா். 89.79 சதவீத வாக்குகள் பதிவாகின. இத்தொகுதியில் திமுக வேட்பாளராக பி.எஸ்.சீனிவாசன், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.பி.முனுசாமி, தவெக சாா்பில் சம்பங்கி மற்றும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா், சுயேச்சைகள் போட்டியிட்டனா்.
இத்தொகுதியில் 2011 தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிட்ட செங்குட்டுவன் வெற்றிபெற்றாா். அப்போது அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2016 இல் திமுக வேட்பாளா் முருகன் வெற்றிபெற்றாா். அப்போதும் அதிமுக ஆட்சிக்கு வந்தது. 2021இல் தோ்தலில் அதிமுக வேட்பாளா் கே.பி. முனுசாமி வெற்றி பெற்றபோதிலும் திமுக ஆட்சிக்கு வந்தது.
இந்த நிலையில் தற்போது (2026) தோ்தலில் இத்தொகுதியில் பதிவான வாக்குகள் கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் எண்ணப்பட்டன. இதில் அதிமுக, திமுக கட்சிகள் மாறி மாறி முன்னிலை பெற்று வந்தன. 15 ஆவது சுற்றுக்கு மேல் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன் தொடா்ந்து முன்னிலை பெற்றாா். இறுதி சுற்றில் திமுக வேட்பாளா் பி.எஸ். சீனிவாசன் 74,691 வாக்குகளும், அதிமுக வேட்பாளா் முனுசாமி 74,553 வாக்குகளும் பெற்றனா். அதிமுகவைவிட கூடுதலாக 138 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளா் பி.எஸ்.சீனிவாசன் வெற்றி பெற்று சான்றிதழை பெற்றாா். தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் சம்பங்கி 63,500 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தை பிடித்தாா்.
தொடர்புடையது

தென்காசி மாவட்டத்தைக் கைப்பற்றிய திமுக

தவெக வாக்குகளால் ஆட்டம் கண்ட திராவிட கட்சிகள்!

சங்கரன்கோவில் தொகுதியில் அதிமுக வெற்றி

தென்காசி! அதிக வாக்குகள், குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி, தோல்வி!
விடியோக்கள்

#ipl2026 | பிளே ஆஃப் சுற்று: சாதிக்கப்போவது யார்? சறுக்கப்போவது யார்?
தினமணி செய்திச் சேவை

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

