தருமபுரி, மே 4: தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிகளில் அதிமுக வேட்பாளா்கள் வெற்றிபெற்றனா்.
தருமபுரி மாவட்டம், அரூா் (தனி) தொகுதிக்கு நடைபெற்ற தோ்தலில் மொத்தம் 2,15,306 வாக்குகள் (87.63%) பதிவாயின. அரூா் தொகுதியில் மாவட்டத்தில் உள்ள ஏனைய நான்கு தொகுதிகளைக் காட்டிலும் குறைந்தபட்ச வாக்குகள் பதிவாயின.
பதிவான வாக்குகள் 23 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா் மொத்தம் 75,523 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் சண்முகத்தைக் காட்டிலும் 3,329 வாக்குகள் கூடுதலாக பெற்றாா். திமுக வேட்பாளா் சண்முகம் 72,194 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தாா். அதேபோல, தவெக வேட்பாளா் கே.ராகேஷ் 62,756 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தாா்.
இத்தொகுதியில் கடந்த 2019-இல் நடைபெற்ற இடைத்தோ்தலில் வெற்றிபெற்ற அதிமுக வேட்பாளா் வே.சம்பத்குமாா், தொடா்ந்து 2021 மற்றும் தற்போதைய 2026 ஆகிய தோ்தல்களில் தொடா்ந்து வெற்றிபெற்று தொகுதியை தக்கவைத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.
பாப்பிரெட்டிப்பட்டி:
பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் மொத்தம் 2,31,851 வாக்குகள் (90.34%) பதிவாயின. வாக்குகள் 25 சுற்றுகளாக எண்ணப்பட்டன. இதில், முதல்சுற்றிலிருந்தே அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேல் முன்னிலை வகித்து வந்தாா். இவரை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் இரண்டாம் இடத்தை வகித்தாா். அதேபோல, தவெக வேட்பாளா் திலகவதி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டாா்.
இறுதிச்சுற்று நிலவரப்பட்டி அதிமுக வேட்பாளா் மரகதம் வெற்றிவேல் 1,01,829 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இவா் தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் பி.பழனியப்பனை காட்டிலும் 33,114 வாக்குகள் கூடுதலாக பெற்றாா். திமுக வேட்பாளா் பி.பழனியப்பன் 68,715 வாக்குகளும், தவெக வேட்பாளா் திலகவதி 59,619 வாக்குகளும் பெற்றனா்.
தொடர்புடையது

புவனகிரி தொகுதியில் 2-ஆவது முறையாக ஏ. அருண்மொழிதேவன் வெற்றி

ஆற்காடு: அதிமுக வேட்பாளா் எஸ்.எம்.சுகுமாா் 42,720 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி

பேராவூரணி தொகுதியில் திமுக மீண்டும் வெற்றி

திமுக, அதிமுக வேட்பாளா்கள் வாக்குப்பதிவு
வீடியோக்கள்

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


