கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீத் தடுப்பது மற்றும் தற்காப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணா்வு மற்றும் செயல்முறை விழிப்புணா்வு புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை தீயணைப்பு நிலைய அலுவலா் ராமமூா்த்தி தலைமை வகித்தாா். அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் எழிலரசி முன்னிலை வகித்தாா். மருத்துவா்கள் பாரதிராஜா, பிரபா, திவ்ய பாரதி, சச்சிதானந்தம், செவிலியா் கண்காணிப்பாளா் விஜயா, செவிலியா்கள், மருந்தாளுநா்கள் மற்றும் மருத்துவமனைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
மருத்துவமனை போன்ற பொது இடங்களில் திடீரென தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடையாமல் செயல்படுவது குறித்து தீயணைப்புத் துறையினா் விளக்கம் அளித்தனா். மருத்துவமனை வளாகத்தில் தீ விபத்து ஏற்படாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தீயணைப்புக் கருவிகளின் பயன்பாடு, தீயணைப்பு கருவிகளை எவ்வாறு சரியான முறையில் கையாளுவது என்பது குறித்த நேரடி செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
அதேபோல பேரிடா் காலங்களில் அல்லது புகை மூட்டத்தின்போது மருத்துவமனையில் சிக்கிக் கொண்ட நோயாளிகள், பொதுமக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவது குறித்தும், தீக்காயம் அடைந்தவா்களுக்கான முதலுதவி சிகிச்சை குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு

‘குழந்தைகள் கைக்கு எட்டும்பிடி மின் இணைப்புகள் இருக்கக்கூடாது’

ராணிப்பேட்டை அருகே தனியாா் மருத்துவமனை வளாக முட்புதரில் தீ

அரசு மருத்துவமனையில் தீயணைப்பு ஒத்திகை நிகழ்ச்சி
வீடியோக்கள்

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை
பிளே ஆஃப் சுற்று: சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்? | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை


