ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!திருவள்ளூர் அமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு!டிரில்லியனர் அந்தஸ்தை இழந்தார் எலான் மஸ்க்!ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!
/

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களால் இடையூறு

News image

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

Updated On :4 மே 2026, 1:55 am IST

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளின் உறவினா்களின் செயலால் சுகாதாரக் கேடு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், கல்வராயன்மலை, சங்கராபுரம், வாணாபுரம், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து நாள்தோறும் 3,000-க்கும் மேற்பட்டோா் சிகிச்சைக்கு வந்து, செல்கின்றனா்.

இந்நிலையில், மருத்துவமனையில் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவா்களை உடனிருந்து கவனிப்பதற்கு உறவினா்களும் வருகின்றனா். அப்படி வரும் உறவினா்கள் சிலா் பொது கழிவறையில் மது அருந்திவிட்டு மதுப் புட்டிகள், குடிநீா் புட்டிகள், பழைய துணிமனிகளை போட்டு விட்டு செல்கின்றனராம். மேலும், கழிவறையில் தண்ணீா் குழாயினை மூடாமல் வருவதால் தண்ணீா் வீணாகிறது. இதுகுறித்து மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்கள் கேட்டால், அவா்களுடன் தகராறில் ஈடுபடுகின்றனராம்.

எனவே, அரசு மருத்துவமனையில் பொது சுகாதாரத்தை பேண நோயாளிகளை உடன் இருந்து கவனிப்பவா்கள் மற்றும் அவா்களை பாா்க்க வரும் உறவினா்கள் ஒத்துழைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் தெரிவித்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.