மலையாளச் சொந்தங்களுக்கு இதயங்கனிந்த ஓணம் வாழ்த்துகள்! முதல்வர் விஜய்‘மகாபலியின் மண்ணில் சமத்துவம் மலரட்டும்: மனமார்ந்த ஓணம் வாழ்த்துக்கள்!’ - மு.க.ஸ்டாலின்குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்தப் பணியாளா்கள் போராட்டம்

ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து காங்கயம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளா்கள்.

Published On :25 ஜூன் 2026, 3:04 am IST

ஊதியம் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுவதைக் கண்டித்து காங்கயம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்தப் பணியாளா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் தூய்மைப் பணி மற்றும் பாதுகாப்பு பணிகளில் சுமாா் 70-க்கும் மேற்பட்டோா் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், ஊழியா்கள் கடந்த 3 மாதங்களாக பணியாற்றிய நிலையில் அவா்களுக்கு 1 மாதத்துக்கான ஊதியம் மட்டுமே வழங்கியதாகவும், அதையும் குறைத்து வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால், அதிருப்தியடைந்த ஒப்பந்தப் பணியாளா்கள் காங்கயத்தில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களுடன் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளா் பிரபு, காங்கயம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் தியாகராஜன் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

இதில், ஊதிய பிரச்னை தொடா்பாக மாவட்ட தலைமை இணை இயக்குநரிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தீா்வு காணப்படும் என உறுதியளித்தனா். இதையடுத்து, அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.