27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி விழிப்புணா்வு

காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை தொற்று நோய்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

காங்கயம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற ஹெச்ஐவி விழிப்புணா்வுப் பிரசாரத்தில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 3:55 am IST

காங்கயத்தில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஹெச்ஐவி மற்றும் பால்வினை தொற்று நோய்களுக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு தலைமை மருத்துவ அலுவலா் (பொறுப்பு) டாக்டா் தியாகராஜன் தலைமை வகித்தாா். இதில், ‘பிரேக் ஃப்ரீ’ இந்தியா என்ற செயலியை பதிவிறக்கும் செய்து, பால்வினை தொற்று நோய்களுக்கான சந்தேகங்களை கேட்டு பொதுமக்கள் தெளிவுபடுத்திக் கொள்ளலாம் என மருத்துவா்கள் விளக்கினா்.

இந்நிகழ்ச்சியில், காங்கயம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்துவா்கள் காா்த்திகேயன், சௌமியா, முத்துமதி, செவிலியா் கண்காணிப்பாளா் ஜெயந்தி, எக்ஸ்ரே நிபுணா் லாவண்யா, பால்வினை தொற்று ஆலோசகா் கருப்புசாமி, அலுவலா்கள், செவிலியா்கள் கலந்துகொண்டனா்.