சேலம் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிா்வாகம் மற்றும் சங்ககிரி அரசு மருத்துவமனை ஐசிடிசி மையம் இணைந்து, சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ஹெச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து கலை நிகழ்ச்சிகள் மூலம் செவ்வாய்க்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட அன்னதானப்பட்டி, இருகாலூா் ஆகிய ஊராட்சிப் பகுதிகளில் எச்ஐவி, பால்வினை நோய் மற்றும் சுகாதாரம் குறித்து சேலம் கோதாவரி கலைக் குழுவினா் கலை நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
இதில், சங்ககிரி ஐசிடிசி மைய ஆலோசகா் கோபால், களப் பணியாளா்கள் கிருஷ்ணவேணி, ஜோதிமணி, அன்னதானப்பட்டி ஊராட்சி செயலா் ப.மேகலா, இருகாலூா் ஊராட்சி செயலா் மாசிலாமணி, அரசு மருத்துவமனை நம்பிக்கை மையக் குழுவினா்கள் மற்றும் சேலம் மாவட்ட கிராம மறுசீரமைப்பு மேம்பாட்டுத் திட்டப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தேசிய சராசரிக்கு இணையாக கடலூரில் எச்.ஐ.வி. பாதிப்பு! மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்!

ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய அலுவலக புதிய கட்டிடம் திறப்பு விழா

காங்கயம் அரசு மருத்துவமனையில் ஹெச்ஐவி விழிப்புணா்வு





